திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் இளைஞர் நலன் மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் இளைஞர் நலன் மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சிச் சமூகப்பணித்துறை சார்பாகவும், டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்தும், இளைஞர் நலன் திட்டத்தின் கீழ் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை தொன் போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், எஸ்.டி.பி., தலைமை தாங்கினார். ஆத்மா மைண்ட் கேர் மருத்துவமனையின் சமூக மனநலப் பணியாளர் ஜே. கரன்லூயிஸ், எம்.எஸ்.டபிள்யூ., சிறப்பு கருத்துரையாளராகக் கலந்துகொண்டு, சுய அறிமுகம், தொடர்பாடல் திறன், நேர்காணலை எதிர்கொள்ளுதல் மற்றும் தன்னம்பிக்கை வளர்த்தல் குறித்து பயிற்சி வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையில் டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 80 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜே. புளோரன்ஸ் ஷாலினி ஆசிரியர் வழிகாட்டியாகச் செயல்பட்டார். இந்நிகழ்ச்சியை சமூகப்பணித்துறை முதுகலைப் பயிற்சி மாணவர்கள் தேவதர்ஷினி.டி., ஹரிஷ்.பி., மஹதி.ரா., தகலாரி தாம் மற்றும் கபினி.ஏ. ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, தொடர்பாடல் திறன் மற்றும் தொழில்முறைத் தயார்நிலையை மேம்படுத்துவதே இப்பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0