திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் கட்டணமில்லா ஆன்மீகச் சுற்றுலா

Sep 18, 2026 - 13:59
Sep 18, 2026 - 14:00
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில்  கட்டணமில்லா ஆன்மீகச் சுற்றுலா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் கட்டணமில்லா ஆன்மீகச் சுற்றுலா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களின் ஆன்மீக உணர்வை மேம்படுத்தும் வகையில், ஒரு பேருந்தில் கட்டணமில்லா ஆன்மீகச் சுற்றுலா, மற்றொரு பேருந்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் ஆன்மீகச் சுற்றுலா நவத்திருப்பதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற ஆன்மீகப் பயணத் தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார்.

சங்கச் செயலாளர் அம்சராம் ஏற்பாடுகளை செய்திருந்தார். துணைத் தலைவர்கள் முரளிதரன், வினோத், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷ், ராமன் மற்றும் இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியில் சமூகப் பெரியவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பயணத்தை சிறப்பித்தனர். சபைத் தலைவர் ஜெனார்த்தனன், கோவிந்தன், அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன் துணைத் தலைவர் முத்து, சூரியமூர்த்தி, பெருமாள், ராம்குமார், சசிகுமார், ரமேஷ் பாபு, எல்ஐசி சங்கர், பேராசிரியர் ரங்கநாதன், கார்த்திக், யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வான்மீகச் சுற்றுலா, பக்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்மீகத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0