திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக நவத்திருப்பதி ஆன்மீக சுற்றுலா : வீரவநல்லூர் குளசேகர ஸ்ரீ ஸ்ரீ ராமா அப்ரமேய ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது
திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக நவத்திருப்பதி ஆன்மீக சுற்றுலா : வீரவநல்லூர் குளசேகர ஸ்ரீ ஸ்ரீ ராமா அப்ரமேய ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நவத்திருப்பதி ஆன்மீக சுற்றுலா சிறப்பாக நடைபெற்றது. வீரவநல்லூர் குளசேகர ஸ்ரீ ஸ்ரீ ராமா அப்ரமேய ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இப்புனித ஆன்மீகப் பயணத்தில், நவத்திருப்பதியில் அமைந்துள்ள 9 பெருமாள் திருக்கோவில்களிலும் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் மகேஷ், செயலாளர் அம்சராம், துணைத்தலைவர்கள் முரளிதரன், வினோத், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், ராமன், இயக்குநர் சீனிவாசன், சபைத் தலைவர் ஜெனார்த்தனன் மற்றும் சமூகப் பெரியவர்கள் கோவிந்தன், சூரியமூர்த்தி, ராஜமோகன், பெருமாள், சசிகுமார், ரமேஷ் பாபு, ராம்குமார், விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் துணைத்தலைவர் முத்து, நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக மக்கள் என மொத்தம் 108 பேர் ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்று நவத்திருப்பதி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தி, ஆன்மீகம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்பயணம், அனைவருக்கும் மனநிறைவை அளிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்த அனைவரும் பத்திரமாக திருச்சி திரும்பி வந்தடைந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0