திருச்சியில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை : 4 பேர் கைது

Sep 21, 2026 - 16:02
Sep 21, 2026 - 16:03
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை : 4 பேர் கைது

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை : 4 பேர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு மீன் மார்க்கெட் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அசூர் பகுதியை சேர்ந்த தவமணி (21) என்பவரை காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்.

இதே போல திருவானைக்கோவில் டேங்க் ரோடு பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சக்தி நகரை சேர்ந்த கணேசன் (வயது 68) என்பவரை திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்து 6 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளார். மேலும திருச்சி பாலக்கரை மீன் மார்க்கெட் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சங்கிலாண்டபுரத்தை சேர்ந்த முகமது அபுதாஹிர் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று திருச்சி தென்னூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரை தில்லைநகர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0