திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் சார்பில் “நீரும் பனையும்” குளங்களைப் புதுப்பித்து பனை நடும் விழா
திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் சார்பில் “நீரும் பனையும்” குளங்களைப் புதுப்பித்து பனை நடும் விழா
திருச்சி புனித ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத் துறை – செப்பர்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி போர்ட் மற்றும் சேவை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பசுமையைப் பேணுதல் ஆகிய நோக்கங்களுடன் “நீரும் பனையும் – குளங்களைப் புதுப்பித்து, உயிர்களை உயிர்ப்பிப்போம்” என்ற உறுதியை மேற்கொள்ளும் வகையில் பனை விதைகள் நடும் கல்லூரியின் காட்சிப்படுத்தினார்கள்.
ஆர்ச்சம்ப்பட்டி கிராம குளக்கரையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் ஆரோக்கியம் சே ச மற்றும் விரிவாக்கத் துறை – செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ், சே.ச. ஆகயோரின் ஆலோசனைப்படி இந்நிகழ்ச்சிக்கு ஆர்ச்சம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் தேவிகா கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
திருச்சி சேவை சிறகுகள் அறக்கட்டளையின் நிர்வாகி ராஜகோபால் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி போர்ட் சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் ரமேஷ் நடராஜன் மற்றும் செயலாளர் ரோட்டேரியன் ராமநாதன் நிர்வாக உறுப்பினர் ரோட்டேரியன் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக செப்பர்டு துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார் முடிவில் ஆர்ச்சம்பட்டி ஊராட்சியின் செயலாளர் தினேஷ் நன்றி கூறினார். கல்லூரியில் நடைபெற்ற எல் நினோ செயல்பாட்டின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம்,
பனை மரங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கான நீர்வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ச்சம்பட்டியில் சமீபத்தில் தூர்வாரப்பட்ட குளத்தின் கரையில் குழி தோண்டும் இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு 250 பனை விதை நடப்பட்டது.
மேலும் அரியவகை மரங்களும் மூலிகைகளும் உயிர் வேலிக்கு தேவையான தாவர வகைகளும் மண்வளம் காக்கும் வெட்டிவேர், அத்தி மரம், தான்றிக்காய் ஆக்ஸிஜன் தரும் மூங்கில், ஆகியவையும் நடப்பட்டன “குளங்களுக்காக வேர்கள்; நீருக்காகப் பனைகள்; பசுமையான எதிர்காலத்திற்காக நமது முன்னெடுப்புகள்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நீர்வளப் பாதுகாப்பிலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் மாணவர்களையும் பொதுமக்களையும் இணைக்கும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக அமைந்தது கல்லூரியின் மாணவர்கள் பேரவை தலைவர் செல்வன் ஸ்ரீதர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் தேசிய மாணவர் படை செயலர் ஆரோக்கிய வில்சன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் மற்றும் 120 க்கும் மேற்பட்ட பொது மக்கள், 35 கல்லூரி மாணவர்கள் என கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் இளங்கலை வேதியியல் துறை மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள்; ஏற்பாடு செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0