ஒரு பண்பாட்டின் பயணம் காவிரிக்கரையின் தூரிகை மொழி : காபி டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா
ஒரு பண்பாட்டின் பயணம் காவிரிக்கரையின் தூரிகை மொழி : காபி டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா
சிந்துவெளி ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” காபி டேபிள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெறுற்றது. சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் முன்னிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி புத்தகத்தை வெளியிட ஓவியர் ராமசுரேஷ், டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் திருமதி நஸ்ரத் பேகம், பொற்கொடி, போத்தீஸ் முத்துக்குமரன், நிஷா, யோகா ஆசிரியர் விஜயகுமார், உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் பேசுகையில், ஒரு பண்பாட்டின் பயணம் நூல் உலகம் முழுவதும் சென்று உள்ளது. . “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” என்ற இந்நூல், மாணவர்களின் கலை மற்றும் மரபு சார்ந்த ஓவியங்களை பதிவு செய்துள்ளது. வந்த வழியை திரும்பிப் பார்ப்பது வரலாறு. பிடித்ததை விடாதீர்கள். பிடிக்காததை தொடாதீர்கள் என்றார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இயக்குனர் சுந்தர் கணேசன் பேசுகையில், ஓவியக் கலையை பரவலாக்க வேண்டும். வரலாறு என்பது ஒரு சமூகம் நடந்து வந்த பாதை. அடுத்த தலை முறைக்குத் கொண்டு சேர்க்க வெவ்வேறு வடிவில் எடுத்து செல்லவேண்டும். அவ்வகையில் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதை சொல்லும் என்றார். ஓவியர் ராமசுரேஷ் பேசுகையில், வாழ்க்கையை சுதந்திரமாக வாழுங்கள். ஓவிய வாழ்க்கை சுதந்திரமாக வாழ வழி வகுக்கும். பண்பாடு, வரலாறு, கலை மற்றும் பாரம்பரிய ஆவணங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நூல் அமைந்துள்ளது என்றார். விழாவில் வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0