புனித ஜோசப் கல்லூரியின் மூலிகைப் பண்ணையில் களப்பணியும் பயிற்சியும் நடைபெற்றது

Sep 30, 2026 - 14:20
Sep 30, 2026 - 14:24
புனித ஜோசப் கல்லூரியின் மூலிகைப் பண்ணையில் களப்பணியும் பயிற்சியும் நடைபெற்றது

புனித ஜோசப் கல்லூரியின் மூலிகைப் பண்ணையில் களப்பணியும் பயிற்சியும் நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத் துறை – செப்பர்டு திட்டம் சார்பில், மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், “உயிர்ப்பன்மை பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொதுநலச் சந்தைப்படுத்தல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு மூலிகைப் பண்ணையில் களப்பணியும் பயிற்சியும் நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகைத் தோட்டத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே ச ஆலோசனை படியும் விரிவாக்கத் துறை – செப்பர்டு திட்ட இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ், சே.ச. தலைமையில் வணிகவியல் மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் கருத்துரைகளையும் வழங்கினார்.

விரிவாக்கத் துறை – செப்பர்டு திட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, பயிற்சி மற்றும் களப்பணியை வழிநடத்தினார்.

 களப்பணியின் போது மாணவர்கள் மூலிகைத் தாவரங்களின் வகைகள், அவற்றின் பயன்பாடுகள், உயிர்ப்பன்மை பாதுகாப்பின் அவசியம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நுகர்வு முறைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், மூலிகைத் தாவரங்களின் பயன்பாடு, அவற்றின் மதிப்புக் கூட்டல் மற்றும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட சந்தைப்படுத்தல் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டு, தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

 3ஆம் ஆண்டு வணிகவியல் மேலாண்மைத் துறை மாணவர் செல்வன் இன்பன் ராஜ் வரவேற்றார். முடிவில் அன்பு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், 52 மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு இயற்கையோடு இணைந்து கற்றல், உயிர்ப்பன்மையைப் பாதுகாத்தல், பொறுப்பான நுகர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் ஆகியவற்றை நடைமுறை அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது. “இயற்கையைக் கற்போம்! இயற்கையைப் பாதுகாப்போம்!” செப்பர்டு திட்டத்தின் நோக்கத்தை முன்னிறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0