திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச அக்குபஞ்சர் முகாம் மற்றும் பேச்சுப் போட்டி
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச அக்குபஞ்சர் முகாம் மற்றும் பேச்சுப் போட்டி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம்* சார்பில் மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் J.J. மகேஷ் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் C.R. அம்சராம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சங்கத் துணைத்தலைவர்கள் முரளிதரன், ராம்பிரசாத், வினோத், துணைச்செயலாளர் சீனிவாசன், இயக்குநர்கள் சூர்யா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி நகர வழக்கறிஞர் சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் சுதர்சன் இலவச அக்குபஞ்சர் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர்கள் சுரேந்திரன், சுரேஷ், சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சைகளை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் GRS அறக்கட்டளை நிறுவனர் சூரியமூர்த்தி நடுவராக கலந்து கொண்டு, மாணாக்கர்களின் பேச்சுத் திறனை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கினார். பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களையும் ஊக்குவிக்கும் வகையில், வழக்கறிஞர் சுதர்சன் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சமூகப் பெரியோர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் வரதாச்சாரி, கோவிந்தன், ஜெயக்குமார், பேராசிரியர் ரெங்கநாதன், பெருமாள், மாமன்ற உறுப்பினர் சங்கர் கோபிநாத், ராம்குமார், ரமேஷ் பாபு, ராஜேந்திரன், மதன், கார்த்திக் உள்ளிட்டோர் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவ சேவை மற்றும் மாணவர்களின் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒருங்கிணைந்து சிறப்பாக நடைபெற்றது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
1