ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா : நலத்திட்டங்கள் வழங்கிக் கொண்டாட்டம்

Oct 4, 2026 - 16:08
Oct 4, 2026 - 16:14
ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா : நலத்திட்டங்கள் வழங்கிக் கொண்டாட்டம்

ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா : நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது. ​விழாவிற்கு ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

 சிறப்பு விருந்தினர்களாக சுரேஷ் பாபு (எ) சுகந்தி ராஜா, அரிமா சாமிநாதன், அரிமா முனைவர் பேராசிரியர் ராச ரத்தினம், வேம்பு ட்ரான்ஸ்போர்ட் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ​முன்னதாக, பள்ளி மாணவிகளின் வரவேற்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் நலிவடைந்தோர், பள்ளி மாணவ - மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும், முதியோர் இல்லத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. ​நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், பொருளாளர் ஜேம்ஸ், லட்சுமணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாகச் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0