திருச்சி ஸ்ரீ ப்ரியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கோலாகலம் : நடனம் ஆடி அசத்திய மாணவிகள்
திருச்சி ஸ்ரீ ப்ரியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கோலாகலம் : நடனம் ஆடி அசத்திய மாணவிகள்
திருச்சி ஸ்ரீ ப்ரியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீ ப்ரியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நாட்டிய மாணவிகளின் "மகிழ்வித்து மகிழ்" என்ற சலங்கை பூஜை விழா நடைபெற்றது. திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ரசிக ரஞ்சன சபாவில் இந்த சலங்கை பூஜை விழாவில் ஆசான் ஆச்சார்யா டாக்டர் சுப்ரியா ரவிக்குமாரின் மாணவிகள் பா.ஸ்ரீநிகா, த.தனுஸ்ரீ வேம்பு, க.மஹாலஷ்மி, ம. மீனாள் மகிழினி, மு.நி. ஜெய்த்ரா ஆகியோர் சலங்கை பூஜை விழாவில் கலந்து கொண்டு நடனமாடினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் டிரஸ்டி அண்ட் பூஜை ஸ்தானிகம் சித்தாந்த ரத்னம், ஸ்ரீ வித்யா பாலா பீடாதிபதி, சாக்த ஸ்ரீ.தங்க. செல்வ ரத்ன தீஷீதர் மற்றும் நிறுவனரும், ஆச்சாரியா சத்துவ ரூபா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் மூத்த மாணவியும் மற்றும் எஸ்.பி.ஏ.ஏ. நிர்வாக உறுப்பினருமான ஸ்ரீமதி. நொஜானா விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நட்டுவாங்கம் சுப்ரியா ரவிக்குமார், நிகழ்ச்சி இயக்கம் காயத்ரி, வாய்ப்பாட்டு அனீஷ் மேனன், மிருதங்கம் ஜோயல் குரு, வயலின் விஸ்வேஷ் ஸ்வாமிநாதன், புல்லாங்குழல் வினோத்குமார், நாமுழவு மற்றும் சிறப்பு ஒளி அழகு ராமசாமி ஆகியோர் பக்கவாத்திய கலைஞர்களாக செயல்பட்டனர். மேடை கலை இயக்கம் இயக்கம் ரவிக்குமார், பயிற்சி ஆசிரியர்கள் வைஷாலி, லோகாவ்யா, பின்புல உதவி அபிராமி, கோபிகா, ஒப்பனை சஜீவ் மேனன் மற்றும் குழுவினர், ஆடை ஆபரணங்கள் எம்.ஜி'ஸ் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சிறப்பு நடனம் ஸ்ரீ பிரியாலயன்ஸ் ஆகியோர் செயல்பட்டனர். இந்த சலங்கை பூலை விழாவில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு மாணவிகளின் நடனத்தை ரசித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0