இரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம்

Oct 5, 2026 - 17:35
Oct 5, 2026 - 17:36
இரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம்

இரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம்

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன்,ஸ்ரீ சக்கரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் இரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

வட்டாரத் தலைவர்கள் சரவணன், சுப்பிரமணி, சரவணகுமார், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் செயலர் தொடக்க உரையாற்றினார். கலை மற்றும் கலாச்சார மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் இரத்த அழுத்த பரிசோதனை முகாமினை துவக்கிவைத்தார்.ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம் யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கௌதம் பேசுகையில், உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. உயர் ரத்த அழுத்தம், பெரும்பாலும் அமைதியான உயிர்கொல்லி” என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படா விட்டால் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றார். தொடர்ந்து இரத்த அழுத்தம் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களின் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தேவையான தகவல்களை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0