பழைய ஆடைகளை நன்கொடையாக வழங்கலாமே : நீங்கள் பயன்படுத்தாத ஆடைகள் ஒருவரின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கலாம்
பழைய ஆடைகளை நன்கொடையாக வழங்கலாமே : நீங்கள் பயன்படுத்தாத ஆடைகள் ஒருவரின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கலாம்
நம் வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு சட்டை, ஒரு சேலை அல்லது ஒரு போர்வை, ஆதரவற்ற ஒருவருக்கு அரிய பரிசாக மாறக்கூடும். நாம் பயன்படுத்தாத பொருட்கள், மற்றொருவரின் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற உதவும்போது, அதுவே உயர்ந்த மனிதநேயச் சேவையாகிறது. திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், 1995 ஆம் ஆண்டு முதல் வீடற்றோர், ஆதரவற்றோர் மற்றும் தேவையுள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.பசிப் பிணி போக்க அன்றாடம் அன்னதானம், மானத்தைக் காக்க உடை, வாழ்வில் நம்பிக்கையை விதைக்க அன்பு என்ற உயரிய நோக்கத்துடன் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏன் பழைய ஆடைகளை நன்கொடையாக வழங்க வேண்டும் இன்றும் பல குடும்பங்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளை வாங்க இயலாத சூழல் நிலவுகிறது. வீடற்ற மக்கள், சாலையோரங்களில் வசிப்போர், ஆதரவற்ற முதியோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், தங்களுக்குத் தேவையான ஆடைகள் இன்றி சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், நாம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஆடைகளைத் தரமான முறையில் நன்கொடையாக வழங்குவது, அவர்களுக்கு அரவணைப்பையும் ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.நாம் அணியாத ஒரு சட்டை, மற்றொருவருக்குப் பிடித்தமான ஆடையாகலாம். நாம் பயன்படுத்தாத ஒரு போர்வை, குளிரில் தவிக்கும் ஒருவருக்குப் பாதுகாப்பாகலாம். நாம் வழங்கும் ஒரு சிறிய உதவி, ஒருவரின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யலாம். நன்கொடையாக வழங்கக்கூடிய பொருட்கள் ஆண்களுக்கான சட்டைகள், டி-ஷர்ட்கள், கால்சட்டைகள், வேட்டிகள், கைலிகள், துண்டுகள். பெண்களுக்கான சேலைகள், சுடிதார்கள், துப்பட்டாக்கள் மற்றும் பிற ஆடைகள். குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பள்ளிக்குச் செல்லத் தேவையான உடைகள். குளிர்கால ஆடைகள், ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் பயன்படுத்தத் தகுந்த படுக்கைப் பொருட்கள். நல்ல நிலையில் உள்ள காலணிகள், பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள். புத்தகங்கள், பாத்திரங்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான பயனுள்ள வீட்டுப் பொருட்கள். நன்கொடையாக வழங்கலாம். ஆடைகளின் தரம் மிகவும் முக்கியம்! தானமாக வழங்கும் பொருட்கள், பெறுபவர்களின் தன்மானத்தையும் நமது மனிதநேயத்தையும் பிரதிபலிக்கின்றன. எனவே, கீழ்க்கண்ட தரநிலைகளைப் பின்பற்றுவோம். ஆடைகளைத் துவைத்து, நன்கு உலர்த்திச் சுத்தமாக வழங்க வேண்டும். கிழிசல், ஓட்டைகள், கறைகள் மற்றும் துர்நாற்றம் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.பட்டன்கள், ஜிப்புகள் மற்றும் தையல்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.ஈரப்பதம், பூஞ்சை மற்றும் உடல் திரவங்களால் ஏற்பட்ட மாசு இல்லாமல் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் தனித்தனியாகப் பிரித்து சுத்தமான பைகள் அல்லது பெட்டிகளில் பாதுகாப்பாக வழங்க வேண்டும். காலணிகள், பைகள், பொம்மைகள் மற்றும் வீட்டுப் பொருட்களும் சுத்தமாகவும் பயன்படுத்தக்கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.நாம் வழங்கும் பொருள், பெறுபவருக்கு உண்மையிலேயே பயன்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நன்கொடை என்பது தேவையற்ற பொருட்களை அகற்றும் வழியல்ல; தேவையுள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அறப்பணியாகும். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக அறிவார்ந்த சமூகத்திற்கு இலவச நூலகம், தமிழர் பாரம்பரியத்தையும் வாழ்வியலையும் பாதுகாக்கப் புழங்கு பொருட்கள் காட்சியகம்,பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம்,உரிமை கோரப்படாத, ஆதரவற்ற உடல்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.தொடர்புக்கு: 98424 12247
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0