சுயநினைவின்றி இருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

Oct 14, 2026 - 21:13
சுயநினைவின்றி இருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம் :  நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

சுயநினைவின்றி இருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 40 வயது மதிக்க தக்க ஆண் நபர் வெள்ளை கருப்பு நிறம் கொண்ட கட்டம் கட்டமான அரைக்கை சட்டை அணிந்து கருப்பு நிற லோயர் அணிந்து சுய நினைவு இல்லாமல் இருந்ததாகவும் அவரது உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையின் போது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறந்த நபர் யார் என்று கண்டறிய காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று அக்கம் பக்கம் விசாரித்தபோது இறந்து போனவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை என்றும் இறந்து போன நபரை இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தனர்.

இறந்த நபர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட பிரேதத்தினை யாரும் உரிமை கோராததால் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய காவலர் பார்த்திபன் உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக் கரை மயானத்தில் கே.கே.நகர் காவல் நிலைய காவலர் பார்த்திபன் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு காவலருடன் இணைந்து உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0