பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பெறப்பட்ட 281 மனுக்களில் 173 மனுக்களுக்கு தீர்வு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பெறப்பட்ட 281 மனுக்களில் 173 மனுக்களுக்கு தீர்வு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பெறப்பட்ட 281 மனுக்களில் 173 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஆ.எம். ஷாஜஹான் தனது சட்டமன்ற அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மனுக்கள் பெறப்பட்ட காலம்: 05.06.2026 முதல் 10.10.2026 வரை மனுக்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள்: மொத்தக் கோரிக்கைகள் 281. தீர்வு காணப்பட்டவை : 173. பரிசீலனையில் உள்ளவை 95. புதிய கோரிக்கைகள் 13. முக்கியக் கோரிக்கைகள்: குடிநீர் வசதி, சாலை அமைத்தல் /சீரமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், வீட்டு வசதி / பசுமை வீடு, பட்டா வழங்குதல். மின்கம்பம் / மின்வசதி, பள்ளிக் கட்டிடம் மற்றும் பள்ளி மேம்பாடு, சுகாதார நிலையம் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல், பேருந்து வசதி, குளம், வடிகால், நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்பு. மனுக்கள் அனுப்பப்பட்ட முக்கியத் துறைகள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (பாபநாசம், அம்மாபேட்டை), வட்டாட்சியர் அலுவலகம் குடிநீர் வசதி, சாலை அமைத்தல் /
சீரமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், வீட்டு வசதி / பசுமை வீடு, பட்டா வழங்குதல். மின்கம்பம் / மின்வசதி, பள்ளிக் கட்டிடம் மற்றும் பள்ளி மேம்பாடு, சுகாதார நிலையம் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல், பேருந்து வசதி, குளம், வடிகால், நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்பு. மனுக்கள் அனுப்பப்பட்ட முக்கியத் துறைகள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (பாபநாசம், அம்மாபேட்டை), வட்டாட்சியர் அலுவலகம் (பாபநாசம்), பேரூராட்சி செயல் அலுவலர் (பாபநாசம்), நெடுஞ்சாலைத்துற, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை. உள்ளாட்சித் துறை, உயர்கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, சமூக நலத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு பெற்றுத்தரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0