திருச்சி உறையூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செயலாளர் நீல்ராஜ் முன்னிலையில் குழந்தைகள் நெல்மணிகளில் அ எழுத்து எழுதி கல்வி பயணத்தை தொடங்கினார்கள்

Oct 21, 2026 - 10:01
Oct 21, 2026 - 11:12
திருச்சி உறையூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செயலாளர் நீல்ராஜ் முன்னிலையில் குழந்தைகள் நெல்மணிகளில் அ எழுத்து எழுதி கல்வி பயணத்தை தொடங்கினார்கள்

திருச்சி உறையூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செயலாளர் பி.நீல்ராஜ் முன்னிலையில் குழந்தைகள் நெல்மணிகளில் அ எழுத்து எழுதி கல்வி பயணத்தை தொடங்கினார்கள்

விஜயதமியையொட்டி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. விஜயதசமி முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தனர். அந்த வகையில் திருச்சி உறையூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செயலாளர் பி.நீல்ராஜ் முன்னிலையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பள்ளியில் அமைக்கப்பட்ட நவராத்திரி கொலுவுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் செயலாளர் பி.நீல்ராஜ் கலந்து கொண்டு, குழந்தைளின் சேர்க்கையை துவக்கி வைத்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, நெல்மணிகள் பரப்பியே தாம்புலத்தில் தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அ வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைத்து பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு செயலாளர் பி.நீல்ராஜ் நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருள் அடங்கிய பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர். முன்னதாக பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0