ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் : அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் நிறுவனத் தலைவர் திருமலை எம் ரவி

Oct 11, 2025 - 22:32
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் : அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் நிறுவனத் தலைவர் திருமலை எம் ரவி

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் : அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் நிறுவனத் தலைவர் திருமலை எம் ரவி

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் நிறுவனத் தலைவர் திருமலை எம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து மக்களும் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவே அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக கேபிள் நிறுவனம் புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் அரசு கேபிள் நிறுவனத்தில் ஒளிபரப்பு செய்யாமல் தடை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது உடனடியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தெரியும் படி செய்வதுடன் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை தொடரக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அமைச்சர்கள் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் கட்சிக்கே அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அதற்காக அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளோம். சமூக நீதி காவலர் ஐயா ராம்தாஸ் அவர்கள் பூரண குணமடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட வாழ்த்துகிறேன். சென்னை டிஜிபி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காரில் சென்ற போது நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு சுமூகமாக நிலைக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெப்பை விரைந்து தொடங்கிட வேண்டும். மற்ற சமுதாய மக்கள் தாக்கப்படும்போது படுகொலை செய்யப்படும் போதும் அரசு முதல் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையில் பார்க்கவ குல நத்தமான் உடையார் மலையமான் உடையார் சுருதிதிமான் உடையார் பார்க்கவ குல மூப்பனார் பார்க்கவ குல நயினார் குல மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை. அது போல கோயில் கொடை விழா நடைபெறும் சமயங்களில் மாற்று சமுதாயத்தினரால் பாதிக்கப்படும் போது குரல் கொடுப்பது இல்லை. இந்த செயல் எண்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குல சமுதாய மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இனி இதுபோன்ற காலங்களில் எங்கள் மக்கள் நலன் காக்க குரல் கொடுக்காது பாராமுகமாக இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எங்கள் ஆதரவு கிடைக்காது என்பதை தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு எபிபிஎஸ் தலைவர் திருமலை எம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0