சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sep 10, 2026 - 16:31
Sep 10, 2026 - 16:32
சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் சார்பில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளியின் மூத்த ஆசிரியர் திருமதி. எஸ்தர் புனிதா இறைவேண்டல் நிகழ்த்தினார். தொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திருமதி. ஜான்சி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பிஷப் ஹீபர் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் உதயா பானு அறிமுக உரை மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் III B.Sc. மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கருத்துகளை விளக்கினர். குறிப்பாக, பல்வேறு வகையான மாசுபாடுகள், கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கு எளிமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி – பதில் அமர்வு மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

சரியான பதில்களை வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக III B.Sc. சுற்றுச்சூழல் அறிவியல் மாணவர்கள் நன்றியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0