மறைந்த தாயார் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்த குடும்பத்தினர்
மறைந்த தாயார் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்த குடும்பத்தினர்
குரும்பலூர், ஆலங்குடி மகாஜனம் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த மு. சுப்புசாமி நாயுடு அவர்களின் மனைவியும், மறைந்த சு. ஞானசேகரன் மற்றும் சு. ரவிசந்திரன், சு.நாகராஜ் ஆகியோரின் தாயாருமான திருமதி சு. ரெங்கநாயகி அவர்கள் இயற்கை எய்தினார். அவரது மறைவால் குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், அவரது உடலைத் தானமாக வழங்க வேண்டும் என்ற உயரிய the மனிதநேயச் சிந்தனையுடன் குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து, திருமதி சு. ரெங்கநாயகி அவர்களின் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்விக்கு உதவும் வகையில் திருச்சி கி ஆ பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி உடற்கூறியில் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறியல் துறைத்தலைவர் மருத்துவர் ஆனந்தி முன்னிலையில் உடல் தானமாக வழங்கப்பட்டன. தங்களின் அன்புக்குரியவரின் மறைவிலும், பிறரின் நலனை முன்னிறுத்தி உடல்தானம் வழங்கிய குடும்பத்தினரின் தன்னலமற்ற செயல் சமூகத்தில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. திருமதி சு. ரெங்கநாயகி உடலைத் தானமாக வழங்கிய குடும்பத்தினரின் மனிதநேயச் செயலைப் பாராட்டி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, உடற்கூறியல் துறைத்தலைவர் மருத்துவர் வீ.ஆனந்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அச்சான்றிதழில் திருமதி ரெங்கநாயகி அவர்களது விலைமதிப்பற்ற உடலை தானமாக கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக முழுமனதுடன் தர முன்வந்த அவரது மகன் /மகள் / உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களின் உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
உடல்தானத்தைச் செயல்படுத்துவதற்கு லயன்ஸ் கிளப் ஆஃப் பிரீமியர் தலைவர் மணி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் உடல் தானம் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தனர். மனித வாழ்க்கை என்பது பிறருக்கு உதவி செய்து வாழ்வதில் தான் முழுமை பெறுகிறது. நாம் வாழும் காலத்தில் பிறருக்கு உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை வழங்கி மகிழ்கிறோம். அதேபோல், நமது வாழ்க்கை நிறைவடைந்த பின்னரும் பிறருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதற்கு உடல் தானம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0