திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

Oct 15, 2025 - 15:55
Oct 15, 2025 - 19:34
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே. ச. தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி, சே. ச. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. இணை முதல்வர் முனைவர் த. குமார் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

கல்லூரியின் முன்னாள் மாணவரான கலாம் அவர்கள் குறித்த நினைவலைகளை கனவு நாயகன் கலாமின் நினைவலைகள் என்னும் பொருண்மையில் தமிழாய்வுத்துறை மேனாள் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி சிறப்புரையாற்றினார்.

 முன்னதாக கலாம் பிறந்த நாளையொட்டி இயற்பியல் துறை சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வுகளை கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் முனைவர் அ. விமல் ஜெரால்டு நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0