ஊரக சமூகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sep 10, 2026 - 16:07
ஊரக சமூகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊரக சமூகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் சமூகப்பணி ஆராய்ச்சித் துறை சார்பில் “Empowering Rural Communities for Disability Inclusion” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாசி மாற்றுரைவிரதேஸ்வரர் கோவில் முன்புறத்தில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள், சம வாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருவாசி ஊராட்சித் தலைவி திருமதி. ஜோதிமலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். திருச்சிராப்பள்ளி இளநிலை மறுவாழ்வு அலுவலர் (Junior Rehabilitation Officer) சுதாகர் வளவாளராக (Resource Person) கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அரசு சட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016, UDID அட்டை, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, உதவிப் பொருட்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சுதாகர் அவர்கள் பயனுள்ள விளக்கங்களை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை இரக்கத்துடன் அணுகுவதற்கு பதிலாக சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களை சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் சமமாகப் பங்கேற்கச் செய்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 10 மாற்றுத்திறனாளிகள் நேரடியாகப் பங்கேற்றனர். அவர்களுடன் ஊரகப் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் மற்றும் அவர்களுக்கான அரசு உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக திருமதி. ஜோதிமலர் மற்றும் சுதாகர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வை கேத்தரின் டெனிலா, பிரவீன், புண்ணிய மூர்த்தி, மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஆசிரியர் பொறுப்பாளராக டாக்டர் டேனியல் சாலமன், இணைப் பேராசிரியர், சமூகப்பணித் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி அவர்கள் செயல்பட்டார். “மாற்றுத்திறனாளிகளுக்கான தடைகளை அகற்றி, சம வாய்ப்புகளை உருவாக்குவதே உள்ளடக்கிய சமூகத்தின் அடையாளம்” என்ற கருத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0