திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பார் ஊழியர் மயங்கி விழுந்து சாவு : கோட்டை போலீசார் விசாரணை

Oct 24, 2025 - 15:44
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பார் ஊழியர் மயங்கி விழுந்து சாவு : கோட்டை போலீசார் விசாரணை

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பார் ஊழியர் மயங்கி விழுந்து சாவு : கோட்டை போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு விடுதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் பாண்டி (வயது 40). இவர் கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவை பஸ்ஸில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் தஞ்சை செல்வதற்காக பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். அப்போது சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் பூத் அருகே பாண்டி மயங்கி விழுந்தார். இதுகுறித்து பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் பாண்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0