மழையால் சூலைகளுக்கு அல்லது சேமித்து வைத்த மூலப்பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் இழப்பீடு வழங்க கோரிக்கை : அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக முப்பெரும் விழாவில் தீர்மானம்
மழையால் சூலைகளுக்கு அல்லது சேமித்து வைத்த மூலப்பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் இழப்பீடு வழங்க கோரிக்கை : அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக முப்பெரும் விழாவில் தீர்மானம்
அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் மற்றும் செங்கல் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 15ம் ஆண்டு தொடக்க விழா, தேசிய குலாலர் சங்க மாநில நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கமித்ரா அறக்கட்டளை நடத்தும் திருச்சி மாவட்ட கல்வி பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது மாவட்டத் தலைவர் மாணிக்கவாசகன் வரவேற்று பேசினார் டி பரமசிவம் வாழ்த்துரை வழங்குகினார். இதில் தேசிய தலைவர் டாக்டர் தியாகராஜன் நீலகண்டர், தேசிய துணைத் தலைவர் கே எஸ் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் எம் ஐயப்பன், மாநில தலைவர் டாக்டர் எஸ் கண்ணன், துளிர் ஐஏஎஸ் அகாடமிசி காளிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தல், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உழைக்க வேண்டும். நேரடி சந்தை வாய்ப்புகள், அரசு உதவிகள் மற்றும் உரிமைகளை சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பெற வேண்டும். வங்கி மற்றும் கடனுதவி பெற சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்திடும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும், கலாச்சாரம் உயர்த்திடவும், மழைக்காலத்தில் வேலை இழப்பும் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்காக குறைந்தது மூன்று மாதங்களுக்கு மாதாந்திர சிறப்பு நிதி செலுத்தப்பட வேண்டும் மழையால் சூலைகளுக்கு அல்லது சேமித்து வைத்த மூலப்பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக கணக்கெடுத்து சிறப்பு இழப்பீடு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு இந்த மழைக்காலத்திற்கான வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஐயப்பன், கண்ணன், துரைராஜ், ராதாகிருஷ்ணன், மாணிக்கவாசகம், வைரப்பெருமாள், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் கலிங்க செல்வம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக திருச்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0