திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பெண் உள்பட 2 பேர் கைது : ஏர்போர்ட் போலீசார் நடவடிக்கை

Oct 30, 2025 - 18:59

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாயி ( 57 ) இவர் ஸ்ரீலங்காவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கருப்பாயி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெயர், பிறந்த ஊர் ,பெற்றோர் பெயர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது .இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து கருப்பாயியை கைது செய்தனர்.. இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த ஆறுமுகம் ( 45 ), மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0