அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று : பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா

Sep 18, 2025 - 16:25
Sep 18, 2025 - 16:29
அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று : பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று

பாஜக-அதிமுக கூட்டணியே என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார். இதுதொடர்பாக திருச்சியில் அவர் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நமது பொருளாதார நிலை பின்தங்கியிருந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது உலகிலேயே பொருளாதாரத்தில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கிறது. விரைந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ஜிஎஸ்டி வசூல் முறையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தால், பல பொருள்கள் 5 விழுக்காடு வரிக்குள் வந்துள்ளன. பல பொருள்களுக்கு வரியே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், அரசியலுக்காக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சிக்கிறார். அதிமுகவில் ஏற்படும் பிளவுக்கு பாஜக காரணம் இல்லை. பல கட்சிகளிலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டு, மீண்டும் சேர்ந்துள்ளன. உள்துறை அமைச்சர், அதிமுக பொதுச் செயலர் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீது மக்கள் மிகப்பெரும் வெறுப்பில் உள்ளனர். இந்த ஆட்சியை அகற்ற அனைவரும் விரும்புகின்றனர். திமுகவுக்கான மாற்றாக அதிமுக-பாஜக கூட்டணியே உள்ளது. எனவே தமிழக மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். வரும் பேரவைத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டிவந்தாலும், திமுக அரசு அகற்றப்படும். சினிமாவிலிருந்து திடீரென வந்து கட்சி தொடங்கியுள்ள விஜய், பாஜகவை கொள்கை எதிரி என்கிறார். அவர் தனது கட்சியின் கொள்கை என்ன என்பதைக் கூறவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக தவெக வர முடியாது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0