திருச்சியில் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ புதிய கின்னஸ் சாதனை

Nov 8, 2025 - 15:35
Nov 8, 2025 - 20:03
திருச்சியில் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ புதிய கின்னஸ் சாதனை

திருச்சியில் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ புதிய கின்னஸ் சாதனை

திருச்சி மேலபுலிவார்டு ரோடு அருகில் சாய் பிட்னஸ் ஜிம் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பிரபல கராத்தே டேக்வான்டோ கிராண்ட் மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டிராகன் ஜெட்லீ புதிய கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

இரண்டு கிலோ எடையுடன் ஒரு நிமிடத்தில் தனது இரு கைகளினால் 360 பஞ்சுகளை செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார் இதற்கு முன் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் ஜோஸ்வா இலியா என்பவர் ஒரு நிமிடத்தில் 333 பஞ்சுகள் செய்தது கின்னஸ் சாதனையாக பதிவானது.

அந்த சாதனையை திருச்சியில் இன்று டாக்டர் டிராகன் ஜெட்லீ முறியடித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் சாதிக் பாஷா, நோட்டரி பப்ளிக் அஸ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கராத்தே மாஸ்டர் கியோசி மனோகரன் டைம் கீப்பராக செயல்பட்டார். சாய் பிட்னஸ் நிறுவனர் மிஸ்டர் தமிழ்நாடு சாய்சரண், கின்னஸ் உலக சாதனையாளர்கள் ஜெட்டிஸ் சோனி கோகுல், சாய்னா ஜெட்லி மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கராத்தே மாணவர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஜெட்லிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0