சோழன் உலக சாதனை படைத்த 9 வயது மாணவி ஷபானா கத்லீன்

Sep 13, 2026 - 21:45
Sep 13, 2026 - 21:46
சோழன் உலக சாதனை படைத்த 9 வயது மாணவி ஷபானா கத்லீன்

சோழன் உலக சாதனை படைத்த 9 வயது மாணவி ஷபானா கத்லீன்

ஷபானா கத்லீன் என்ற 9 வயது மாணவி, தனது உடலைக் கிடைமட்ட நிலையில் வைத்து, ஒருபக்க நாற்காலியில் இரு கால்களையும், மறுபக்க நாற்காலியில் தோள்பட்டைகளையும் மட்டும் வைத்த நிலையில், உடலைச் சமநிலையில் வைத்திருந்தார். 

 இந்த நிலையில் இருந்தபோது, உடலின் நடுப்பகுதியானது தாங்கிப் பிடிப்பதற்கு எந்தவித உதவியும் இல்லாமல் அந்தரத்தில் இருந்தது. அந்தரத்தில் இருந்த உடலின் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் 25 கிலோ எடைகொண்ட 20 கற்களை வைத்து, சுத்தியலால் அடித்து அந்தக் கற்கள் உடைக்கப்பட்டபோது, அதனைத் தாங்கிய சாதனை உலக சாதனையாகச் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டது.

 5 நிமிடங்களில் படைக்கப்பட்ட இச்சோழன் உலக சாதனை நிகழ்வு, மாணவி கல்வி கற்கும் சான்ஜோ ஆங்கிலப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாணவியின் கராத்தே பயிற்சி ஆசிரியர் டோமினிக் சேவியர் ஒருங்கிணைத்து நடத்தினார். சோழன் உலக சாதனை படைத்த மாணவிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, கோப்பு மற்றும் பேட்ஜ் ஆகியவை வழங்கி பாராட்டப்பட்டது. சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக அதன் நிறுவனம் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆதிரை மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளர் செல்வராஜ் போன்றோர் நடுவர்களாக பங்கு கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0