திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Nov 8, 2025 - 18:55
Nov 8, 2025 - 19:51
திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அதனை முன்னிட்டு திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தில்லை நகரில் துவங்கி சாலை ரோடு வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளோம்.

 இதில் சிறப்பு விருந்தினராக பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியை டாக்டர் செந்தாமரை கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்களிடம் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது, தற்போது சிறுவயதிலேயே புற்றுநோய் வருகிறது. ஆரம்பக் கட்டடத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை விரைவில் குணப்படுத்த முடியும். உணவு பழக்கவழக்கங்களில் கட்டாயம் மாற்றம் தேவை, பீசா, பர்கர், பரோட்டா, சவர்மா, பார்பிக்யூ, தந்தூரி போன்றவற்றில் அதிக கொழுப்பு மற்றும் ஹை சுகர் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது கேன்சர் செல்களை உருவாக்கும். மேலை நாடுகளில் இது போன்ற உணவுகளால் தான் புற்றுநோய் வருகிறது என்பதை உணர்ந்து அவர்கள் காய்கறிகள் பழங்கள் அடங்கிய சாலட்டுகளை உணவாக உண்டு வருகின்றனர். நமது உணவு பழக்க வழக்கங்கள் மாற வேண்டும் நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய பயிர்கள், சாலட்டுகள், கீரை வகைகளை உண்ண வேண்டும். அசைவ உணவுகளை குளிர் படுத்தி பின்னர் அதை சூடு செய்து சாப்பிடுகின்றனர். அதிலுள்ள எண்ணெய்யும் மீண்டும் மீண்டும் சூடாக்கப்படுகிறது. மிட் நைட் பிரியாணி கடைகள் அதிகமாகி விட்டதாலும், கிராமங்களிலும் அதிக அளவு இது போன்ற உணவுகள் கிடைப்பதால், இவை அனைத்திலும் கேன்சர் உருவாக்கும் கெமிக்கல்கள் உள்ளன அது மருத்துவர்களான எங்களுக்கு தெரியும். ஒரே நாளில் கேன்சர் வந்தால் மக்கள் அனைவருக்கும் இது தெரியும் ஆனால் இது படிப்படியாக 5 அல்லது 10 வருடங்கள் இதுபோன்ற உணவுகளை உண்ட பின்பு தான் கேன்சருக்குண்டான அறிகுறி பொதுமக்களுக்கு தெரியும். எங்களுக்கு தற்போதே அது குறித்து தெரியும் என்பதால் அதை இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. சுவைக்காக இது போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணராமல் உள்ளனர் என மருத்துவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0