உயர் கல்வியில் வழிகாட்டல் மற்றும் நிறுவனம் மீதான பற்றுதல் வளர்த்தல் எனும் தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

Nov 9, 2025 - 17:24
உயர் கல்வியில் வழிகாட்டல் மற்றும் நிறுவனம் மீதான பற்றுதல் வளர்த்தல் எனும் தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

உயர் கல்வியில் வழிகாட்டல் மற்றும் நிறுவனம் மீதான பற்றுதல் வளர்த்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் (UBA) பிரிவுடன் இணைந்து, “உயர் கல்வியில் வழிகாட்டல் மற்றும் நிறுவனம் மீதான பற்றுதல் வளர்த்தல்” எனும் தலைப்பில் ஒரு ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி (Faculty Development Program ) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி ஆசிரியர்களின் வழிகாட்டும் திறன்களை மேம்படுத்தி, நிறுவனப் பற்றை வலுப்படுத்தி, முழுமையான தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்க உரையை இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி. இராஜசேகரன் பொறுப்புணர்வும் சுயமுனைப்பும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் வழிகாட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், இயக்குநர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களின் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர் டாக்டர் எம். அனுசுயா, பதிவாளர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், நிகழ்ச்சியின் திட்டத் தொகுப்பை வழங்கி, அதன் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை விளக்கினார். முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட ரொட்டேரியன் AKS டாக்டர் கே. ஸ்ரீனிவாசன், ஆலோசகர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தலைவர், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி, ஸ்ரீரங்கம் கிளை, திருச்சிராப்பள்ளி, தமது உரையில் ஆசிரியர்களின் பாசமும் நிறுவன ஒழுக்கமும் கல்வி மேன்மைக்கான அடித்தளமெனக் கூறினார். நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்களாக, திருமதி கீதா சங்கர், Shoreless Infinite என்ற நூலாசிரியர், TEDx பேச்சாளர் மற்றும் டேல் கார்னெகி பயிற்சியாளர், ஜே.எஸ்.எஸ். மணியன், டேல் கார்னெகி சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் மற்றும் துணைத் தலைவர், பவான் சைபர்டெக், சென்னை, திருமதி. கீதா ஜெயராம், யோகா தெரபிஸ்ட், பெங்களூரு, கர்நாடகா ஆகியோர் சிறப்பு உரைகள் வழங்கினர்.

 நாள் முழுவதும் நடைபெற்ற அமர்வுகள் ஆர்வமூட்டும் வகையிலும் அறிவு வளர்க்கும் வகையிலும் அமைந்திருந்தன: அமர்வு 1: “The Changing Role of Faculty” – திருமதி கீதா சங்கர், ஆசிரியர்களின் பணிபுரியும் பங்கு கற்பித்தலைத் தாண்டி வழிகாட்டி, ஊக்குவிப்பாளர், வழிகாட்டுநர் ஆகிய வடிவங்களில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கினார். அமர்வு 2: “Mentorship and Student Engagement” ஜே.எஸ்.எஸ். மணியன், மாணவர்களின் கல்வி, உணர்ச்சி மற்றும் தொழில் சார்ந்த தேவைகளைப் புரிந்து அவர்களுடன் இணைந்து செயல்படும் வழிகளை பகிர்ந்துகொண்டார்.

அமர்வு 3: “Fostering Institutional Commitment and Retention Mindset” – திருமதி கீதா சங்கர், ஆசிரியர்கள் நிறுவன மதிப்புகளுடன் மீண்டும் இணைந்து பொது நோக்குடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அமர்வு 4: “A Journey to Teacher Wellness” – திருமதி கீதா ஜெயராம் யோகா காட்சியுடன் கூடிய அமர்வை நடத்தி, மன அமைதி, சமநிலை மற்றும் உடல் நலனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சி பற்றி ஆசிரியர்கள் வழங்கிய கருத்துக்கள் மிகவும் நேர்மையானவையாக இருந்தன. அவர்கள் இந்த பயிற்சி ஊக்கமளிக்கும், பயனுள்ள, மற்றும் கற்பித்தல் நடைமுறைகளில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருந்ததாக தெரிவித்தனர். நிகழ்ச்சி வரவேற்புரையை டாக்டர் பொன் கிறிஸ்டினல், இணை சுகாதார அறிவியல் பள்ளி, வழங்கினார். நிகழ்ச்சி நன்றி உரையுடன் டாக்டர் பரத் குமார், உயிரியல் பொறியியல் துறை, நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் கே. சித்ராதேவி (முதல்வர், இணை சுகாதார அறிவியல் பள்ளி), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலட்சுமி ஆகியோருடன், UBA ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் எஸ். சார்ல்ஸ் ஜெபபலன் மற்றும் டாக்டர் எம். ஜோசப் செல்திராஜ் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0