திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் அழைத்து பேசவில்லை என்றால் போராட்டம் : அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் தீர்மானம்
திருச்சி காந்தி மார்கெட் அனைத்து வியாபார சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் எம். கே.எம். காதர்மைதீன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் என்.டி. கந்தன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் ஜி.வெங்கடாசலம், வி.என். கண்ணதாசன், எஸ்.எம்.டி. முஹமது ஷபி, கே.டி.தங்கராஜ், யூ.எஸ். கருப்பையா, ஏ.தங்கராஜ், எஸ்.பி.பாபு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சரவணன் ஆகியோரிடம் காந்தி மார்கெட் மற்றும் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் சம்மந்தமாக நேரில் மனு கொடுத்து விளக்கம் கேட்டதில், காந்தி மார்க்கெட் 6.40 ஏக்கர் எக்காலத்திலும் இடமாற்றம் செய்யப்படாது, தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்றும் ஒரு சேர கூறியதற்கு நன்றி தெரிவிப்பது. அதே சமயம், பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் யாருக்காக, எதற்காக கட்டப்படுகிறது என்ற நமது கேள்விக்கு முறையான பதில் தராமல் அது யாருக்கு வேண்டும் என்றாலும் டெண்டர் முறையில் கொடுப்போம். அதே சமயம் மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்ற பதில் கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன் அப்போதிருந்த கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அமைச்சர் கே.என் நேரு கடந்த மே 7-ந் அனைவரையம் அழைத்துப் பேசி அவர்கள் விருப்பப்படி தான் கடைகளின் அளவு, எண்ணிக்கை போன்றவை தேதி அன்று வியாபாரிகள் கணக்கில் கொண்டு கட்டுமானப்பணி தொடங்குவோம் என்று கூறிவிட்டு, தற்போது வரை எங்களை அழைத்துப்பேசாமல் பஞ்சப்பூர் புதிய காய்கனி மாக்கெட் பணி வெகு விரைவாக நடைபெறுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வியாபாரிகள் வாழ்வாதாரம் மிகுந்த கேள்விக்குறி ஆகி இருக்கிறது என்பதையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக வருத்தத்தை பதிவு செய்கிறோம். எஸ்.ஐ.ஆர். தேர்தல் பணிகள் இருப்பதால் 10 அல்லது 15 நாடகளுக்குள் காந்தி மார்க்கெட் அனத்து தரப்பு வியாபாரிகளையும் கலெக்டர் தலைமையில் கலந்து ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் அவசியம் நடத்துவதாக நமது திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்திரவாதம் அளித்ததன் அடிப்படையில் 2 வாரங்களுக்குள் அனைரையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பேண்டும். 2 வாரங்களுக்குள் அழைத்துப் பேசவில்லை என்றால், காந்தி மார்க்கெட் வியாபார அனைத்து சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டம் நடத்தப்படும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



