ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம் : திருச்சி வரலாற்று குழுவினரின் ஓர் பார்வை ஓர் பயணம்

Nov 18, 2025 - 10:23
ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம் : திருச்சி வரலாற்று குழுவினரின் ஓர் பார்வை ஓர் பயணம்

ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம் : திருச்சி வரலாற்று குழுவினரின் ஓர் பார்வை ஓர் பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை ஓர் பயணம் மேற்கொண்டனர். வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆனைமலை சமணக்குடைவரை அமைவிடம் சென்று பார்வையிட்டு பேசுகையில், மதுரை ஆனைமலையில் உள்ள குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள கல்வெட்டில், "இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு உள்ள கல்வெட்டில், "இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0