வீட்டின் பூட்டை உடைத்து ரூ 70 ஆயிரம் பணம் திருட்டு : 2 பேர் கைது

Nov 29, 2025 - 15:35
வீட்டின் பூட்டை உடைத்து ரூ 70 ஆயிரம் பணம் திருட்டு : 2 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து ரூ 70 ஆயிரம் பணம் திருட்டு : 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி சத்யா. இவர்கள் 2 பேரும் கடந்த 18ந்தேதி வீட்டில் இருந்து மணப்பாறையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டனர். மேலும் வீட்டில் அவரது உறவினர் இருந்தார். இந்நிலையில் அந்த பெண் தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 70 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக சத்தியா அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாகஇரண்டு பேர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தனர். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அரியமங்கலம் திருநகரை சேர்ந்த ஜெய்பாலாஜி (வயது 41) மற்றும் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சத்யா வீட்டில் பணத்தை திருடியது தெரிய வந்தது.மேலும் அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி மற்றும் பெண்னை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோபால், ஸ்டீபன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0