திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழாவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

Nov 30, 2025 - 22:07
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழாவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழாவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச நூலக அடையாள அட்டையை வழங்கியதுடன், தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியும், நூலகர்களுக்கு சாதனை விருதுகள் வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், நூலகம் என்பது புத்தகத்தை அடுக்கி வைக்கும் மையம் அல்ல அது சிந்தனைக்கான மையம், பல புத்தகங்களை புரட்டிப் எடுத்தாலும் ஏதோ ஒரு புத்தகம் நமக்கு அறிவு கண்ணை திறக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் பரிசு அல்ல போட்டியில் பங்கேற்ற அனைவரும் பரிசுக்கு பெற தகுதியானவர்கள். இப்போதுள்ள தலைமுறையினர் தங்களை அறியாமல் செல்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர்,

 விளையாட்டுக்காக போனை வாங்குகிறார்கள் ஆனால் அந்த குழந்தையால் ஐந்து நிமிடத்தை தாண்டி வெளியே வர முடியவில்லை, ஒரு மணி நேரமாக அந்த செல்போனில் மூழ்கி தவிக்கிறார்கள். அந்த அடிமைத்தனம் இருந்து விடக்கூடாது என்பதற்காக தான் புத்தகம் வாசிப்பை வலியுறுத்தி வருகிறேன். வாசிக்கலாம் வாங்க என புத்தகம் சொல்லும் ஆனால் வா சிக்கலாம் என மொபைல் சொல்லும் புத்தகத்தை யார் எழுதினால் என்ன அதனை நான் ஏன் படிக்க வேண்டும் என்றெல்லாமல் அந்தப் புத்தகம் நமக்கு மற்றும் சமுதாயத்திற்கு என்ன சொல்கிறது என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிகம் படங்கள் உள்ள குறைவான எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை முதலில் வாசிக்க கொடுக்க வேண்டும் அதன் பின்னர் அவர்களது படிக்கும் ஆர்வத்தை தூண்டி மேலும் பல புத்தகங்களை வாசிக்க கொடுக்க வேண்டும். வாசிப்பு பயிற்சி மூலம் பல சொற்கள் அந்த குழந்தைகளுக்கு தெரிய வரும், நமது குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பயிற்சியை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெருந்தலைவர் காமராஜர் பேரிலே கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற அந்த நூலகத்தை நான் பார்வையிட்டு அதன் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன் முடிந்த வரையிலும் ஜனவரி மாதம் இறுதிக்குள் அதனை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம். அதே நேரம் தற்போது கட்டப்பட்டு கொண்டிருக்கும் காமராஜர் நூலகம் நூலகமாக மட்டுமல்லாமல் அறிவு சார் மையமாகவும் இருக்கும், தந்தை பெரியார் பெயரில் கோவையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நூலகமும் விரைவில் திறப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். இதுபோல நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் சேலத்தில் பாரதிதாசன் பெயரில் நூலகங்களும் பணிகள் நடைபெற்று வருகிறது இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அறிவுசார் மையத்தை மற்றும் சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதுதான் ஆசை என்றார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் மற்றும் நூலகர்கள் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனிடையே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியின் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி குழந்தைகள் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0