42 ஆண்டுகளாக பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வரும் மருத்துவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன்
42 ஆண்டுகளாக பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வரும் மருத்துவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன்
தமிழ்நாடு குற்றாலம் இலத்தூரை பூர்வீகமாகக் கொண்ட சுடலைமுத்து தேவர் வடகாசி இணையரின் தவப்புதல்வர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் ஆவார். மனைவி தமிழரசி சுப்பையா மகன் மருத்துவர் விஜய் கார்த்திக். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 42 ஆண்டுகளாக பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வருகிறார். பாரம்பரிய மருத்துவம் என்பது தாவரங்கள், மூலிகைகள் மற்றும் தாதுக்களை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள், ஆன்மீக சிகிச்சைகள் மற்றும் உடல் நுட்பங்கள் மூலம் நோய் தீர்க்கும் ஒரு பழமையான சுகாதார முறை ஆகும், இது மனம், உடல் மற்றும் சுற்றுச்சூழலின் சமநிலையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, இதில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் சீன மருத்துவம் போன்ற பல முறைகள் அடங்கும், பல நாடுகளில் மக்கள் அடிப்படை சுகாதாரத் தேவைகளுக்காக இதை நம்பியிருக்கிறார்கள்.
பாரம்பரிய மருத்துவத்தின் முக்கிய அம்சங்கள் என்னவெனில் நோயை மட்டும் பார்க்காமல், நோயாளியின் உடல், மனம் மற்றும் சூழல் என அனைத்தையும் சமநிலையில் வைக்க முயல்கிறது. சுருக்கமாக, பாரம்பரிய மருத்துவம் என்பது பல நூற்றாண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வரும், இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான மருத்துவ முறையினை செயல்படுத்தி வருகிறார். முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். அனைத்து நோய்களுக்கும் சித்தா ஆயுர்வேதா மருந்துகள் வழங்கி வருபவர். அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில், தேவர் பேரவை, முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை அமைப்புகளை நடத்தி வருகிறார். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ சங்கத்தில் பதினைந்தாயிரம் நபருக்கு மேல் உறுப்பினராக உள்ளனர். லட்சக்கணக்கான மருத்துவர்களுடன் தொடர்பில் உள்ளவர். மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியும் நலத்திட்டங்கள் வழங்கியும் உள்ளார். நூற்றுக்கணக்கான மருத்துவ மாநாடுகளை நடத்தி உலகம் எங்கும் சித்த மருத்துவத்தை பரப்புவதற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். நூற்றுக்கணக்கான மருத்துவ கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.ஹெல்த் பேமிலி ஹெல்த் ஆகிய இதழ்களில் நூற்றுக்கணக்கான மருத்துவ கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் நோய்களும் ஹோமியோபதி வைத்தியமும் நோய் தீர்க்கும் சித்தா மருந்துகள் நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன சித்த மருத்துவக் களஞ்சியம் தமிழக அரசால் சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது சித்த மருத்துவக் களஞ்சியம் நூலுக்கு சிறந்த நூல் ஆசிரியர் விருது சிறந்த நூல் ஆகிய விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது அக்குபஞ்சர் ஓர் அற்புத மருத்துவம் என்ற நூலை எழுதியுள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு நமது எம்ஜிஆர் நாளிதழில் இடம்பெற்ற கட்டுரையால் முன்னாள் முதல்வர் ஜெயலாலிதாவால் பாராட்டப்பட்டவர். இவரது சித்த மருத்துவ சேவையை பாராட்டி கலியுக சித்தர், சேவை செம்மல், சித்த ரத்னா, சேவா ரத்னா, சித்த வைத்திய திலகம், வைத்திய ஜோதி, மருத்துவர்களின் போர்வாள், சித்த வைத்திய வித்தகச் சித்தர், மனிதநேய செம்மல், டாக்டர் புரட்சித்தலைவி விருது,பசும்பொன் தேவர் விருது போன்ற பல விருதுகளை பெற்றவர். சிறந்த மருத்துவதற்கான விருதினை தமிழக ஆளுனர், இஸ்ரோ விஞ்ஞானி சிவன், முன்னாள் சுகாதார அமைச்சர் தலித் எழில் மலை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனிடம் திருமூலர் விருது பெற்றுள்ளார். மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு சிறந்த மருத்துவருக்கான விருதினை பலமுறை பெற்றுள்ளார். உலகமெங்கும் சித்த மருத்துவம் புகழ்ப பரவ வேண்டியும் தமிழ் மருத்துவம் காப்பாற்றப்பட வேண்டியும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவர்களுக்காக போராடிவரும் கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் 24 வருடம் மருத்துவர்களுக்காக மருத்துவர்களின் போர்வாள் என்ற மாத இதழை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து 25 வருடம் இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தியுள்ளார் காவல்துறையிடம் இணைந்து இருபதுக்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தியுள்ளார் இதுவரை 3500 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார் கொரோனா காலத்தில் டெங்கு காய்ச்சல் காலத்தில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் இருமல் சளி மருந்துகள் உணவு பட்டலங்கள் அரிசி ஆகியவை வழங்கி உள்ளார்.
யோகா விஜயகுமார் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0