சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு சேவை (ERS) சங்க தொடக்க விழா மற்றும் மாணவர் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழா
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு சேவை (ERS) சங்க தொடக்க விழா மற்றும் மாணவர் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழா
பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு சேவை சங்கம் (Eco Restoration Services – ERS), விரிவாக்கப் பணிகளுக்கான புலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணைந்து, சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு ERS சங்கம் தொடக்க விழா மற்றும் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் Green Associate / Green Fellow திரு. C. பாலகிருஷ்ணன், M.Sc. Agri., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ERS கிளப்பின் தொடக்க விழா மற்றும் மாணவர் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் தொடக்கமாக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் சங்க ஒருங்கிணைபாளர் முனைவர் த. உதய பானு இறைவணக்கம் மற்றும் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பாலகிருஷ்ணன் “நீல வானுக்கான தூய்மையான காற்று” — ஆரோக்கியமான மக்களுக்கும் ஆரோக்கியமான பூமிக்கும், காலநிலை நடவடிக்கையையும் தூய்மையான காற்று நடவடிக்கையையும் ஒன்றிணைத்தல் பற்றியும் மற்றும் ERS சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை பாராட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து ERS சங்கத்தின் மாணவர் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, பசுமை வளாகம், கழிவு மேலாண்மை மற்றும் சமூக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்வின் நிறைவாக உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் சங்க ஒருங்கிணைபாளர் முனைவர் ம.வினீத் நன்றியுரை வழங்கினார். “நமது பூமியை குணப்படுத்த ஒன்றிணைந்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு சேவை சங்கம் தொடர்ந்து பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலப் பணிகளை முன்னெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0