அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு
அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு
திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி ஓர் பார்வை ஒர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், கிழக்கிந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு தலைவர் விஜயகுமார் பேசுகையில்,குக்லியெல்மோ மார்க்கோனி 1874-ல் இத்தாலியில் பிறந்தார். கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக்குறிப்புகளை அனுப்ப மின்காந்த அலைகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தன் இருபதாவது வயதில் உணர்ந்தார். 1895-96-ல் இதற்கான கருவியை இயக்கிக் காட்டினார். 1901ஆண்டு “மார்க்கோனி செய்திகள்” அட்லாண்டிக் கடலைக் கம்பியின்றிக் கடந்து சாதனை நிகழ்த்தியது. சக்தி மிக்க 50 கிலோ வாட் ஒலிபரப்பை அன்றைய முதல்வர் காமராசர் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள சொந்தக் கட்டிட வளாகத்தில் 2-11-1962-ல் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் கட்டமைக்கப்பட்டது. தலைமை நிலையமும் அதோடு இணைந்த எட்டு ஸ்டூடியோக்களும் குளத்தூரில் அமைந்துள்ள ஒலி பரப்பியும் முத்துக்குளத்தூரில் அமைந்துள்ள நிகழ்ச்சி அஞ்சல் நிலையமும் இணைந்த ஒன்றுதான் திருச்சி வானொலி நிலையமாகும். இது 100 கிலோ வாட்ஸ் ஒலிபரப்பாக 1-1-1988 முதல் மேம்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 50% மும் நிலப்பரப்பில் 56% மும் திருச்சி வானொலியின் நிகழ்ச்சிகள் சென்றடைவதாக அது பெருமைப்படுகிறது. திருச்சியைச் சுற்றியுள்ள—திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்ட மக்களை (356 லட்சம்) திருச்சி வானொலியின் நிகழ்ச்சிகள் தழுவுகின்றன என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0