திருச்சி அல்லித்துறை சி.எஸ்.ஐ துவக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா

Dec 20, 2025 - 12:07
திருச்சி அல்லித்துறை சி.எஸ்.ஐ துவக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா

திருச்சி அல்லித்துறை சி.எஸ்.ஐ துவக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா

திருச்சி அல்லித்துறை சி.எஸ்.ஐ துவக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா சி.எஸ்.ஐ துவக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ரெவரண்டு ஜெ. அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.

 சிறப்பு விருந்தினர்களாக மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் பி அந்தோணிசாமி, ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், ஜே கே சி கௌரவ தலைவர் பேராசிரியர் ரவி சேகர், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சிபி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கினார்கள். விழாவில் இனாம் நவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார். முடிவில் ஆசிரியை ராஜு ரீட்டா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சீபா செல்லதுரை, சாந்தகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.இதில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0