விபத்தில் சிக்கிய பெயர் விலாசம் தெரியாதவர் சிகிச்சை பலனின்றி மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

Dec 25, 2025 - 16:02

திருச்சி பெருகமணி சுங்க சாவடி அருகே நூலை வாயில் முன்பு சாலை விபத்தில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 மதிக்கத்தக்க ஆண் விபத்தில் சிக்கி இடது காலில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தார். மேற்படி நபரின் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் இறந்த நபர் குறித்து பெட்டவாய்த்தலை காவல் துறையினர் விசாரிக்கையில் மேற்படி நபர் பெயர்களாம் கண்டறிய முடியவில்லை.

மேற்படி நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் பெட்டவாய்த்தலை காவல்நிலைய உதவிய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் காவலர் சிதம்பரம் முன்னிலையில் திருச்சி தென்னூர் குழுமிக் கரை மயானத்தில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலுக்கு இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0