UTJ சார்பில் நாளை மறுநாள் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 6ம் ஆண்டு பட்டமளிப்பு விழா : அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு

Jan 30, 2026 - 12:22

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் பகுதியில், இயங்கிவரும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 6ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, 52வது வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் குடும்ப தர்பியா மாநாடு ஏன் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி அஷ்ரப்தீன் அவர்களும், இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் சமீரா பர்வீன் அலீமா சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சிக்கு UTJ மாநில துணை செயலாளர் ஷாஹீன் முன்னிலை வைக்கிறார். முன்னதாக UTJ மாநில செயலாளர் அப்பாஸ் அலி வரவேற்புரை ஆற்ற முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் நஜிமுதீன் நன்றி கூறுகிறார். இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று UTJ மாநில தலைவர் பீமநகர் ரபீக் அழைப்பு விடுத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0