திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஓட்டல் அருகே பிணமாக கிடந்த வாலிபர் : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

Sep 27, 2025 - 18:39

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஓட்டல் அருகே பிணமாக கிடந்த வாலிபர் : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பிரபலமான ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டல் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து ஓட்டல் ஊழியர் ராஜாராம் என்பவர் கோட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0