திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊர்வலமாக வந்து மனுதாக்கல் : கரகாட்டம், ஒயிலாட்டம் வான வெடிக்கையுடன் பிரம்மாண்ட வரவேற்பு

Apr 4, 2026 - 22:17
Apr 4, 2026 - 22:18
திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊர்வலமாக வந்து மனுதாக்கல் : கரகாட்டம், ஒயிலாட்டம் வான வெடிக்கையுடன் பிரம்மாண்ட வரவேற்பு

திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊர்வலமாக வந்து மனுதாக்கல் : கரகாட்டம், ஒயிலாட்டம் வானவெடிக்கையுடன் பிரம்மாண்ட வரவேற்பு

திருவெறும்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூரே அதிரும் வகையில், வானவேடிக்கைகளும் பல்வேறு விதமான இசைக்கருவிகளும் கரகாட்டம், பொம்மை ஆட்டத்துடன் ஊர்வலமாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் வேல் கொடுத்து வழி நெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர் மேலும் இதனை அடுத்து திருவெறும்பூர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் கிரேன் மூலம் மாலை அணிவித்தனர். அதன் பிறகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரான அமுதாவிடம் வழங்கினார். பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு வேட்பாளராக மூன்றாவது முறை தன்னை நிறுத்தியதற்கு தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காகவும் மேலும் திருவெறும்பூர் தொகுதியில் தான் செய்த வளர்ச்சி பணி மற்றும் கூட்டணி கட்சியினரின் பலம் மற்றும் ஐந்து ஆண்டுகள் செய்த சாதனை ஆகியவை என்னை மீண்டும் வெற்றி பெற செய்யும் என்றும், மேலும் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்ய போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதியை வைத்து தேர்தலில் வாக்கு கேட்பதாகவும் 2016 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த தொகுதியில் போட்டியிட்ட வந்த பொழுது எந்த மனநிலையில் வந்தேனோ அதே மனநிலையில் தான் தற்போது உள்ளேன் என்றும் இன்னும் தொகுதி மக்கள் நான் அதிகம் செய்வேன் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பல்வேறு நலப் திட்டங்களை தொகுதியில் மேற்கு கொண்டுள்ளேன் இதுவரை ரூ 450 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை இந்த திருவெறும்பூர் தொகுதியில் மேற்கொண்டுள்ளதாகவும், தொகுதியில் 20 ஊராட்சி, ஒரு பேரூராட்சி, ஒரு நகராட்சி, 13வார்டு மாநகராட்சி என பல்வேறு பட்ட நிர்வாகம் இருந்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும்.

அதேபோல் அரியமங்கலம் குப்பை கிடங்கு மாற்றுவதற்கு உரிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தான் அமைச்சராக உடனே இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டதாகவும் அந்த இடத்தில் குப்பை சாயில் அதிகமாக இறங்கி உள்ளதால் அதில் கட்டிடங்கள் கட்ட முடியாது அதனால் அந்த இடத்தில் தற்பொழுது பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவிடம் கேட்டு நீதி பெற்று நடைபெறும் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படும் இந்த குப்பையை ஈரப்பதம் உள்ள குப்பை மற்றும் காய்ந்த குப்பை என இரண்டாக தரம் பிரித்து அவற்றை அங்கிருந்து அகற்றும் பணியில் நடைபெறுகிறது, இரு 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த இடத்திலிருந்து குப்பைகள் அகற்றப்படும் தமிழகத்தில் எத்தனை போட்டிகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தான் இடையில் போட்டி என்றும், நாம் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் வாக்கு சேகரிக்கிறோம் கல்வியில் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்க முடியாது மாநில உரிமைக்கு குரல் கொடுப்போம் அங்கு இருந்து கொண்டு அவர்கள் நாம் என்ன செய்ய செய்ய வேண்டும் என கூறுவதை நம்மால் ஏற்க முடியாது இங்குள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நான் அதனை செய்வோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி எம்.பி. துரை வைகோ, மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திலீபன் ரமேஷ், தேமுதிக நிர்வாகி டிவி கணேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0