திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம் : பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

Apr 15, 2026 - 14:12
திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர  பிரச்சாரம் : பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம் : பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் 

திருச்சி மாநகராட்சியின் 27, 29 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து கொண்டு வர திமுக அரசுக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும்” என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு,, காஜாத்தோப்பு, ஸ்டீல் தோப்பு, சின்னசாமி நகர், தென்னூர் மந்தை, ஜெனரல் பஜார், பட்டாபிராமன் தெரு, சங்கீதபுரம், மூலக்கொல்லை, மல்லிகைப்புரம், தென்னூர் ஹை ரோடு, பாத்திமா நகர், ஆட்டு மந்தை, சேவியர் கோயில் தெரு, தாசில்தார் சந்து, இஸ்லாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சி மாநகருக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், உழவர் சந்தை மேம்பாடு, புதிய சாலைகள், பாதாள வடிகால் விரிவாக்கம், குடிநீர் குழாய் மாற்றுப் பணிகள், பூங்கா மற்றும் நடைபாதை அமைப்புகள், சிசிடிவி பாதுகாப்பு விரிவாக்கம், மாநகர சுகாதார வசதிகள் மேம்பாடு போன்ற பல்வேறு அரசு சாதனைகள் இந்தப் பகுதிகளின் வளர்ச்சியை உயர்த்தியுள்ளன” என்று குறிப்பிட்டார். “மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து கொண்டு வர திமுக அரசுக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

பெண்கள், இளைஞர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். காலை நேரத்திலேயே மக்கள் திரளாக திரண்டதால் 29 -வது வார்டு முழுவதும் தேர்தல் பரபரப்பு அதிகரித்தது. தொடர்ந்து 27-வது வார்டு பகுதிகளான தென்னூர் மந்தை, ஜென்ரல் பஜார், பட்டாபிராமன் தெரு, சங்கீதபுரம், தென்னூர் ஹை ரோடு, ஆட்டு மந்தை தெரு, தாசில்தார் தெரு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி மாலையிட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி அன்போடு வரவேற்றனர். மேலும் எங்கள் வாக்கு உங்களுக்கே என உறுதி அளித்தனர். அப்பகுதி முழுவதும் சென்ற அமைச்சர் கே என் நேரு மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0