அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

May 2, 2026 - 17:36
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ காணொளி மூலம் கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்துல் சமது, தொகுதி பார்வையாளர்கள் கே.என். சேகரன், மறைமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைவது முதல், படிவம் 17C-ஐ சரிபார்ப்பது மற்றும் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகளை உறுதி செய்வது வரை சட்ட ரீதியான நுணுக்கங்களை என்.ஆர். இளங்கோ முகவர்களுக்கு விளக்கினார். இதில் தலைமை முகவர்கள் மற்றும் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0