அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தவெகவில் இணைந்தார்

May 19, 2026 - 13:45
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தவெகவில் இணைந்தார்

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தவெகவில் இணைந்தார்

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி முன்னாள் செயலாளர், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி முன்னாள் செயலாளர், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க. டெல்டா மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி துண்டை அணிவித்து வரவேற்பு அளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0