திருச்சியில் த.வெ.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு : கு.ப. கிருஷ்ணன் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினார்

Jun 3, 2026 - 15:41
திருச்சியில் த.வெ.க. சார்பில்  நீர்மோர் பந்தல் திறப்பு : கு.ப. கிருஷ்ணன்  பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினார்

திருச்சியில் த.வெ.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு : கு.ப. கிருஷ்ணன் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினார்

தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் யானை பம்பு பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளான வருகிற 22- தேதி வரை நடைபெறும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் உமாபதி, செயலாளர் கதிரேசன், பொருளாளர் கணேஷ் கேலரி கணேசன், தென்னூர் ஷாஜகான், ஸ்ரீரங்கம் நகர எம் மாரிமுத்து, வழக்கறிஞர் முல்லை சுரேஷ், நவசக்தி சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வி. பத்மநாதன், என்.எஸ். பூபதி, ரஜினிகாந்த், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை ப. வினோத், உஸ்மான் பாபு , என்ஜினியர் ஆர்.கே. விக்னேஷ், வரகனேரி அரசு, டாக்டர் தமிழரசி சுப்பையா, உய்ய கொண்டான் ரவிச்சந்திரன், பாலக்கரை ஷேக், லோகநாதன், எஸ்.ஆர். எம். அப்பாத்துரை, பவுன் டி.டி. கிருஷ்ணன், தென்னூர் ஆர். ராஜா, வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன், கே.கே. என். கரிகாலன், நிர்மலா, எம்.ஏ. துரைப்பாண்டியன், எடமலைப்பட்டி புதூர் வைத்தியநாதன், அருணாச்சலம், கேபிள் முஸ்தபா, தென்னூர் சேட்டு, செக்கடி சலீம், இளைஞர் அணி ஜாபர் அலி, இனியானூர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0