உலக இசை தினத்தில் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் : 24 இசைக் கலைஞர்கள் 10 மணி நேரம் வீணை வாசித்து வரலாற்று உலக சாதனைகள்

Jun 18, 2026 - 08:12
Jun 18, 2026 - 08:13
உலக இசை தினத்தில் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் : 24 இசைக் கலைஞர்கள் 10 மணி நேரம் வீணை வாசித்து வரலாற்று உலக சாதனைகள்

உலக இசை தினத்தில் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் : 24 இசைக் கலைஞர்கள் 10 மணி நேரம் வீணை வாசித்து வரலாற்று உலக சாதனைகள்

உலக இசை தினத்தை ஒட்டி கரூர் நாரதகான சபாவில் சகோதரிகள் டாக்டர் கே விஸ்வ ஜனனி, பரணி பார்க் பள்ளி மாணவி மற்றும் நேத்ரா குழுவினர் 22 பேர் தொடர்ந்து 10 மணி நேரம் ஐந்து நிமிடம் தொடர்ந்து வீணை வாசித்து இரண்டு புதிய உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனைகள் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட் இந்தியா அகாடமி நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்து அதன் தலைவர் பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி நேரில்பதிவு செய்து 24 மாணவ மாணவிகளுக்கான இரண்டு உலக சாதனை சான்றிதழ் பதக்கம் கோப்பையை வழங்கினார்.

அதை சிறப்பு விருந்தினர்கள் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் சூரிய நாராயணன் ஆகியோர் உலக சாதனை மாணவிகள் டாக்டர் கே விஸ்வ ஜனனி, நேத்ரா, ஜனிகா, காவியா, சே காயத்ரி, ப.சு காயத்ரி, ரித்திகா, ஸ்ரீமதி வேத ரித்திகா, இராம் சுந்தர், ரமாதேவி, வொஜ்ஜலா தன்வி, இனியா, வரலட்சுமி, புவனேஸ்வரி, ஜீவனா, தேஜஸ்வி, பூஜா, ரங்கநாத், ஆஷ்ரிதா. ஸ்ம்ருதி, தன்ஷிகா ஸ்ரீ, லட்சயமணி, பிரியதர்ஷினி, ஸ்ரீவித்யா, அபராஜிதா, அஜித்தா ஆகியோருக்கு வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சி இசை ஆசிரியை காயத்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் இரண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0