ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் “பிங்க் அக்டோபர்” மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி : "3 grams at 999" பரிசோதனைப் பாக்கேஜ் அறிமுகம்
பங்கேற்பு மற்றும் பயனடைந்தவர்கள் நிகழ்ச்சியில் சுமார் 100 பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். அதில், 23 பெண்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட 999 பாக்கேஜ் மூலம் பரிசோதனை செய்து பயனடைந்தனர். விழா நிறைவு நிகழ்ச்சி நிறைவில், “பிங்க் பலூன் விடுதலை” நிகழ்வு நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயை எதிர்த்து நம்பிக்கை, வலிமை, ஒற்றுமையை குறிக்கும் வகையில் வானத்தில் பலூன்கள் விடப்பட்டன. மருத்துவமனை சமூகப் பணி ஹர்ஷமித்ரா புற்றுநோய் & பல்துறை சிறப்பு மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக திருச்சியில் புற்றுநோய் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் முன்னணி வகித்து வருகிறது. “பிங்க் அக்டோபர்” மாதத்தில், தொடர்ந்து பல்வேறு இடங்களில் இலவச விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0




