SDPI கட்சி மகளிர் அணியின் சார்பாக பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
SDPI கட்சி மகளிர் அணியின் சார்பாக பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பாக தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் 'மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' மாவட்ட தலைவர் தெளலத் நிசா தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பஷீரா கனி, SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட துணைத்தலைவர் மூமினா வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட தலைவர் தெளலத் நிஷா தலைமையுரை ஆற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாத்திமா தொகுப்புரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் அணி மாநில செயலாளர் ஆலிமா.மெஹராஜ் பானு,SDPI வர்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் கே.முபாரக் அலி ஆகியோர் கலந்துக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட துணைத்தலைவர் மூமினா கண்டன கோஷம் எழுப்பினார். இந்நிகழ்வில் மேற்கு தொகுதி தலைவர் முபீனா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ரம்ஜான், செயலாளர் பரக்கத் நிஷா, கிழக்கு தொகுதி தலைவர் சாஜாத்தி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகளும், SDPI கட்சியின் மாவட்ட,தொகுதி, கிளை நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டார்கள். இறுதியாக மாவட்ட ஐடி விங் தலைவர் செய்யது பீவி நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0