முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் : துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் : துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானா விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சேலை, அரிசி, மரக்கன்று நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர். கே. ராஜா தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் எம் செந்தில் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அக்பர் அலி, சரண்ராஜ், மணப்பாறை நடேசன், பெரிய மிளகு பாறை சுப்பிரமணி, சமயபுரம் சதீஷ்குமார், அஸ்வின், கோகுல், ஞானவேல், ஜீவா, கார்த்திக், நடராஜ், மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார், தனசேகர், டிவிஎஸ் டோல்கேட் நந்தகுமார் ஹரிஹரன், உறையூர் மூர்த்தி, தினேஷ், தாஜுதீன், லால்குடி கலைவாணன் லோகு, சசிரேகா, ரேணுகாதேவி, புத்தூர் பாபு, BHEL பரத், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0