தூய திரித்துவ பேராலயத்தின் 200-வது ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
தூய திரித்துவ பேராலயத்தின் 200-வது ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தூய திரித்துவ பேராலயத்தின் 200-வது ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார் மற்றும் விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க CSI தூய திரித்துவ பேராலயத்தின் (Holy Trinity Cathedral) 200-வது ஆண்டு (இருநூற்றாண்டு) நிறைவு விழாவை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை (Special Cover) குறித்து நிறுவனர் நாசர் பேசுகையில், திருநெல்வேலி மறைமாவட்டத்தின் தூய திரித்துவ பேராலயம், தென்னிந்திய திருச்சபையின் (CSI) கீழ் இயங்குகிறது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மிஷனரியான ரெவ். சி.டி.இ. ரெனியஸ் (Rev. C.T.E. Rhenius) என்பவரால் இந்த ஆலயம் 1826-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரே "திருநெல்வேலியின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படுகிறார்.இந்த பேராலயம் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 2026 ஜூன் 25 அன்று பாளையங்கோட்டையில் பிரம்மாண்ட இருநூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அழியா நினைவாக மாற்றும் வகையில், இந்திய அஞ்சல் துறை இந்த சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளது. சிறப்பு அஞ்சல் உறையில் தூய திரித்துவ பேராலயத்தின் முகப்புப் படமும், அதன் கீழே பேராலயத்தை நிறுவிய ரெவ். சி.டி.இ. ரெனியஸின் உருவப்படமும் அச்சிடப்பட்டுள்ளன.பேராலயத்தின் பெயர் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளதது. உறையில் "200 Bicentenary - HOLY TRINITY CATHEDRAL" என்ற சிறப்பு லோகோ அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் தலையின் மீது, பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தின் மூலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் முத்திரை இடப்பட்டுள்ளது. இதில் பேராலயத்தின் கோபுரம், இருநூற்றாண்டு லச்சினை மற்றும் வெளியீட்டுத் தேதியான 25.06.2026 ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



