உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்திடக் கோரி தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Jul 17, 2026 - 12:50

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (2.0) தொடர்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்திட வேண்டி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மருதமுத்து சந்திரன், தயாநிதி ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் நவநீதன், செந்தில் ராணி, ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் பாக்கியராஜ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0